ஊரடங்கு நீடிக்கப்படுமா? 27ஆம் திகதி இறுதி முடிவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு.
நாட்டில் முழுநேரமும் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளைமறுதினம் (27) அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இலங்கையில் சில நாட்கள் தொடர்ச்சியாக நாளாந்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.