இலங்கையின் கொரோனா நிலை தொடர்பாக WHO வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த மாதம் 24 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, இலங்கையின் மத்திய மாகாணத்தில் கடந்த வாரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக 20 ஆம் திகதி வௌியிடப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்திலேயே அதிகூடிய (57%) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.