முடக்கப்பட்ட 10 நாட்களில் இபோசவுக்கு 800 மில்லியன் ரூபா இழப்பு
நாட்டை 10 நாட்களுக்கு முடக்கி வைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தால் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சேவையில் ஈடுபடுத்தாத போக்குவரத்துச் சபை பஸ்களால் 80 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாடு இயல்புநிலையிலிருக்கும் போது விடுமுறை நாட்களையும் சேர்த்து 800 முதல் 850 மில்லியன் ரூபா வரையில் மாதாந்த வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முடக்கப்பட்டிருந்தாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகள் சிலவற்றுக்காக சுமார் 350 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
அதில் பயணம் செய்கின்ற பயணிகளின் எண்ணிக்கையை விட சேவையையே நாம் கருத்தில் கொண்டு செயற்படுகிறோம்.
இருக்கைகளுக்குரிய பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லுமாறு கோரும் நிறுவனங்களுக்கு ஏற்றிச் செல்கிறோம்.
கடமை நேரம் முடிந்த பின்னர் அவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலின்படியே செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.