ராணுவத்தினரின் ஏற்பாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அஸ்ரா சனிக்கா தடுப்பூசி.
காத்தான்குடியில் இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அஸ்ரா சனிக்கா தடுப்பூசி(26)வியாழக்கிழமை போடப்பட்டன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையுடன் இலங்கை இராணுவத்தினரினால் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி சித்தீக்கியா மகளிர் கல்லூரி மண்டபத்தில் இத் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதன் போது மட்டக்களப்பு கல்லடி 231வது படைப்பிரிவின் பிரிகேடியர் கேர்ணல் திலிப் பண்டார இத் தடுப்பூசி போடும் நிகழ்வை காத்தான்குடிக்கு சென்று பார்வையிட்டார்.
இதன் போது இராணுவ சிவில் பாதுப்;பு அதிகாரி மேஜர் தர்மரத்ன, மற்றும் மேஜர் அசேல யாப்பா, கெப்டன் சாம்பர அத்துக் கொரல, கெப்டன் சுதன் சேனா ரட்ன உட்பட இராணுவ அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இதன் போது கலந்து கொண்டனர்.
காத்தான்குடியில் இது வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை போடாதவர்கள் இங்கு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டதுடன் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி போடும் வாகனத்தின் மூலமும் இத் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம் பெற்றது.