கொரோனா நோய் மரணங்களுக்கு புகைப்பிடிப்பதும் பிரதான காரணம்.
புகைப்பிடிப்பதும் கொரோனாத் தொற்று நோய் மரணங்களுக்குப் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனக் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தைநல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இவ்வாறான கொரோனா மரணங்கள் பல கடந்த வாரம் பதிவாகியுள்ளன. புகைப்பிடிப்பதானது நுரையீரலைப் பாதிக்கின்றது. இவ்வாறானவர்கள் விரைவில் கொரோனாத் தொற்றால் ஏற்படும் நியூமோனியாவுக்கு உள்ளாகி விடுகின்றனர்.
புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் புகைப்பிடிபவர்கள் எதிர்கொள்ளும் அதே பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
அதேபோன்று புகைப்பிடிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் குழந்தைகளும் சிகரெட் புகையின் தீமையான விளைவுக்கு இலகுவில் உள்ளாகி விடுகின்றனர்” – என்றார்.