தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது!
“நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி மணித்தியாலத்தில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”
இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்ட சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 60 ஆயிரத்து 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் நேற்றுப் பிரவேசித்த 641 வாகனங்கள் மற்றும் 1,128 நபர்கள் சோதனையிடப்பட்டன.
அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அதேவேளை, அங்கிருந்து வெளியேறிய 901 பேரும் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.