யாழில் 6 பேர் கொரோனாத் தொற்றால் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உட்பட யாழ். மாவட்டத்தில் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வீட்டில் உயிரிழந்தார் என்று கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுடன் சிகிச்சை பெற்ற வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரும், கம்பர்மலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.