இனம் ஒழிக்கப்படும்! இலங்கையர் இணைக்கப்படும்!!
விரைவில் பிறப்பு சான்றிதழில் கேட்கப்படும் பெற்றோர் திருமானவர்களா எனும் கேள்வியையும் இனம் தொடர்பான கேள்வியையும் பிறப்பு சான்றிதழ் கேள்வி பத்திரத்தில் இருந்து அகற்றவுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிறப்பு சான்றிதழ் கேள்வி பத்திரத்தில் பெற்றோர் திருமணவானவர்களா? இல்லையா என ஒரு கேள்வி உண்டு. அதன்படி பெற்றோர் திருமணமாகாதவர்கள் என பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்படுவதால் அக் குழந்தைகள் பல சமூக சிக்கல்களுக்கு பிற்காலத்தில் முகம் கொடுக்க நேரிடுகிறார்கள். இனிவரும் காலங்களில் பிள்ளைகளுக்கு அப்படியான ஒரு நிலை ஏற்படாவண்ணம் அந்த கேள்வியை பிறப்பு அத்தாட்சி பத்திரத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் அனைத்து இலங்கையரது பிறப்பு சான்றிதழ்களில் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இனம் குறித்த பகுதியும் நீக்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் பிறப்பு சான்றிதழில் இனம் எனும் பகுதியில் சிங்கள – இலங்கை தமிழ் – இந்திய தமிழ் – இலங்கை சோனகர் – இந்திய சோனகர் – மலே என குறிப்பிடப்பட்டு வந்தது. அதற்கு பதிலாக இலங்கையர் எனக் குறிப்பிடப்படும் என பதிவாளர் என். வித்தானகே தெரிவித்துள்ளார்.
மேலும் இலத்திரனியல் முறையில் பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் முறையும் ஆரம்பிக்கப்படும் எனவும் பொதுத் தேர்தலின் பின் இவை நடைமுறைக்கு வரும் என்றார் அவர்.
புதிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
Online ஊடாக பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.