தனிமைப்படுத்தல் சட்டவிதியை மீறி காரில் பயணித்த பொலிஸ் அதிகாரி சிக்கினார்!
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் இரு நபர்களுடன் காரில் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவரை மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தும்மலசூரிய பொலிஸுடன் இணைந்துப் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோது, மாரவிலவில் பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்றை வீதிச் சோனையில் இருந்த பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.
காரில் இருந்த மூவரில் ஒருவர் காரிலிருந்து இறங்கிப் பொலிஸாருக்குப் பதிலளித்த நிலையில் ஏனைய இருவரும் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
பொலிஸாருக்குப் பதிலளித்த நபர், தும்மலசூரிய பொலிஸுன் இணைந்து சேவையாற்றிவரும் பொலிஸ் அதிகாரி என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தும்மலசூரியாவிலிருந்து மாரவில பகுதிக்கு அவர்கள் பயணித்தமைக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.