அமைச்சர் சன்ன இறுதியாக சஜித்தின் கொரோனா மருந்தை ஏற்றுக்கொண்டார்! இறக்குமதிக்கும் அனுமதி…..
கொரோனாவுக்கான மருந்தாக வெளிநாடுகளில் பாவிக்கப்பட்டு வரும் , இரண்டு மருந்துகளின் கலவையான REGEN-COV ஐ இறக்குமதி செய்ய ஒரு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மருந்து ஒழுங்குமுறை ஆணையம் முன்பு இம் மருந்தை கொள்வனவு செய்ய ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இந்த மருந்து மற்ற நாடுகளில் வெற்றிகரமாக கொரோனாவுக்குப் பயன்படுத்தப்படுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த போது அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.