இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு குறித்து 2-ஆவது மாதாந்த அறிக்கையில் தெரிவித்த அதிரடி நடவடிக்கை !
இந்தியாவில் கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை 30 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களை கொண்ட மிகப் பெரிய டிஜிட்டல் தளங்கள் தமக்கு வந்த புகாா்கள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்-ஆப் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை 30,27,000 வாட்ஸ்-ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் 594 புகாா்கள் வந்ததாகவும், 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘இது தங்களின் 2-ஆவது மாதாந்திர அறிக்கை’’ என்று வாட்ஸ்-ஆப் நிறுவன செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.