ஆட்சியமைக்கும் கட்சியுடன் இணைந்து செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்

தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்குமோ அந்த கட்சியுடன் இணைந்து போவதற்கும், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்கும், அரசியல் தீர்வு பற்றிய முன்னெடுப்புகளை செய்வதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் (20) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பொருத்தமற்ற அல்லது விரும்பாத ஒருவர் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தங்களுடைய அரசியல் பயணங்கள் எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நாம் எப்பொழுதுமே ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றோம்.

நாட்டுக்குள் அரசியல் தீர்வை பெற்று வட,கிழக்கு மக்கள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கு கீழே சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே போராடி வருகின்றோம், அந்த பயணம் தொடர்ந்து செல்லவேண்டும் என்பதற்காகவே முயன்று வருகின்றோம்.

இந்த தேர்தலில் ஒரு பலமான ஆணையை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று நாங்கள் மிக உயர்ந்த நம்பிக்கை வைத்திருக்கின்றோம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments are closed.