ஊரடங்கு நீக்கப்படுமா? இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறினார்.
இதேவேளை, கொரோனா பரவலை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.