தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 647 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோன்று மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று 1335 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 1959 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.