உலருணவு வழங்கும் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுப்பு.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய குடும்பங்களுக்கான உலருணவு வழங்கும் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டடுள்ளதாகவும் மக்களுக்கான அத்தியாவசிய செயற்பாடுகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய செயற்பாடுகள் தடையின்றி இடம்பெற்று வருகின்ற நிலைமையில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச, கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனியானது 120ரூபா நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்திற்கென அண்மையில் 39500 கிலோ கிராம் சீனி கூட்டுறவு சங்கங்களிற்கு பகிர்ந்தளிப்பதற்காக கூட்டுறவு திணைக்களத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவை கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் மொத்த விற்பனை தடை செய்யப்பட்டு தனிப்பட்ட நுகர்வுக்காக மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.