அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தங்கள் பிரயோகிப்போம் – அங்கஜன் இராமநாதன்

எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தங்கள் பிரயோகிப்போம் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஶ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

என் கனவு யாழ் என ஆரம்பத்தில் கூறும் போது பலர் கேலி செய்தார்கள். ஒரு விடயத்தினை ஆரம்பிக்கும்போது சமூகத்தில் பல தடைகள் ஏற்படும். சிலர் தட்டிக் கொடுப்பார்கள் சிலர் எதிர்ப்புக்களை வெளியிடுவார்கள். ஆனால் தற்போது எமக்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது.

எங்களுடைய இருப்பு என்பது இல்லாமல் செய்யப்படுகின்றது. அதற்கான அறிகுறிகளை நேரடியாக பார்க்கின்றோம். எமது பிரதேசங்களில் எமது மக்களின் சனத்தொகை பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது.

காலம் காலமாக அரசியல் கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுகின்றனர். ஆனால் அவற்றினை ஐந்து வருடங்களுக்கு பின்னர் காணமுடியாதுள்ளது. ஆனால் எமது விஞ்ஞாபனம் அவ்வாறில்லை. எமது விஞ்ஞாபனத்தினை எப்போதும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றார்.

Comments are closed.