அவசரகாலச் சட்டம் மீது நாடாளுமன்றில் நாளை விவாதம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரகடனத்தை நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை விவாதித்து சபையில் அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்த அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டன.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அதன்பின்னர் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரகடனம் மீது விவாதம் நடைபெறவுள்ளது.