ஐக்கிய தேசிய கட்சியை பிளடுபடுத்தியதனை போன்றே நாட்டையும் சஜித் பிளவு படுத்துவார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தியதை போன்று, சஜித் பிரேமதாச அதிகாரம் கிடைத்தால் நாட்டை இரண்டாக பிளவுப்படுத்துவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை சஜித் பிரேமதாசவை போன்று பிளவுபடுத்தியவர்களை கண்டுபிடிக்க முடியாதென தெரிவித்துள்ள பிரதமர் அதிகாரம் கிடைத்தால் நாட்டையும் அவ்வாறே பிளவுபடுத்தி விடுவார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாட்டில் சஜித் பிரேமதாச முன்வரிசையில் இருக்கின்றார் என்பது எங்களுக்கு தெரியுமெனவும் கூறியுள்ளார்.

வடக்கிற்கு சென்று ஒரு விடயத்தினையும் தெற்கில் மற்றுமொரு விடயத்தினையும் சஜித் பிரேமதாச தெரிவித்து வருவதாக கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரே விடயத்தையே குறிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.