மத ஸ்தானங்களை மேம்படுத்த நடவடிக்கை – சஜித் பிரேமதாச
மத ஸ்தானங்களை மேம்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்குமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் முன்னணி சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது கலாசார நிதியத்தின் நிதியை நாட்டின் மத மேம்பாட்டுக்காக பயன்படுத்தி சமய மீள் எழுச்சியொன்றை ஏற்படுத்தியதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, எதிர்வரும் காலங்களில் தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்நடவடிக்கை தொடரும் எனவும் கூறியுள்ளார்.
நாட்டில் ஒழுக்க விழுமியங்களை காக்கக்கூடிய சமய மேம்பாடுகளை ஏற்படுத்தி மத ஸ்தலங்களை மேம்படுத்துவதே தாம் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் இலக்கு எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Comments are closed.