தேர்தலின் பின் டிஜிட்டல் பிறப்புச்சான்றிதழ் – பதிவாளர் நாயகம் தகவல்
பிறப்புச் சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்களை சர்வதேசத்துக்கு ஏற்ற வகையில் புதிய டிஜிட்டல் முறையுடன் வழங்கப்பட உள்ளதாக பதிவாளர் நாயகம் N.C விதானகே தெரிவித்துள்ளார்.
அனேகமானோர் முகங்கொடுக்கும் சமூக பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் மும்மொழிகளிலும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் இலங்கை பிரஜை ஒருவருக்கு பிறப்பின் போதே அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான இலக்கமொன்றும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.