இன்றையபஞ்சாங்கம் 08.09.2021 இன்றைய ராசிபலன்.
சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:12
சந்திர உதயாதி நாழிகை : 06:59
சந்திர அஸ்தமனம்: 19:29
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஆவணி 23
பட்சம் : சுக்ல பக்ஷம்
திதி : துவிதை – 26:33 வரை
நட்சத்திரத்தன்று : உத்தரம் – 15:56 வரை
யோகம் : சுபம் – 23:37 வரை
முதல் கர்ணன் : பாலவம் – 15:37 வரை
இரண்டாவது கர்ணன் : கௌலவம் – 26:33 வரை
சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் : கன்னி
அபிஜித் நேரம்: இல்லை
துர்முஹுர்த்தம் : 11:42 – 12:31
அமிர்தகாலம் : 09:05 – 10:36
Varjyam : 23:50 – 25:20
ராகுகாலம் : 12:06 – 13:38
குளிகை : 10:35 – 12:06
யமகண்டம் : 07:33 – 09:04
சந்திராஷ்டமம்
சதயம்+உத்திட்டாதி
?மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
?ரிஷபம்
ரிஷபம்: வருகால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.
?மிதுனம்
மிதுனம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
?கடகம்
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
?சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். ஆடை ஆபரணம் சேரும்.வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உதவுவார்கள். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
?கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
?துலாம்
துலாம்: அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள் திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
?விருச்சிகம்
விருச்சிகம்: எதார்த்தமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
?தனுசு
தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
?மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
?கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். மறதியால் பிரச்சினை வரக்கூடும். விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
?மீனம்
மீனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.