மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் சினோபாம் தடுப்பூசி.
மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ஏற்கனவே 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை (தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி எதையும் பெற்றுக் கொள்ள சகலருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (9) மன்னார் மாவட்டத்தில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி, நானாட்டான் டிலாசால் பாடசாலை, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மறிச்சிக்கட்டி அல் ஜெசிரா பாடசாலை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றில் சினோபாம் தடுப்பூசி 20 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் முதலாவது ஊசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது சினோபாம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் 2வது சினோபாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி,வைத்திய சாலை பணியாளர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.