கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண்ணொருவர் மரணம்!
குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்கினிமிட்டிய – பலுகொல்ல காட்டுக்குள் உட்பிரவேசித்த பெண்ணொருவர், கட்டுத்துவக்கு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பலுகத்தேவ நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் கறிவேப்பிலை பறிப்பதற்காக மற்றுமொரு பெண்ணுடன் குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணை உடனடியாக கல்கமுவ வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.