சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான களவிஜய விழிப்புணர்வு செயற்திட்டம்.
மக்கள் மத்தியில் சேதனப்பசளை உற்பத்தி மற்றும் பாவனையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டிசுட்டானால் ஒழுங்கமைக்கப்பட்ட சேதனப் பசளை தொடர்பான களவிஜய விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த செயற்றிட்டமானது ஊரடங்கு கால நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறு வடமாகாண விவசாய திணைக்களம் மற்றும் காலநிலைக்கு சீரமைவான விவசாயத் திட்டத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சேதனப்பசளை உற்பத்தி தொடர்பான உள்ளீடுகளை காட்சிப்படுத்தியவாறான வாகன பவனி மற்றும் துண்டுப்பிரசும், ஒலி பதிவின் மூலமான விழிப்புணர்வு பிரச்சாரம் என்பன ஊடாக மக்களுக்கு சேதனப்பசளை தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
தற்போதைய ஊரடங்கினால் தமது ஒய்வு காலத்தை சேதனப்பசளை உற்பத்திக்கு பயன்படும் விதமாக இச் செயற்திட்டம் அமைந்துள்ளது என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.