கிளிநொச்சியில் கொரோனாவால் மூவர் மரணம்!
கிளிநொச்சியில் நேற்று உயிரிழந்த மூன்று பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவசம்பு தியாகராசா (வயது 79), முத்தையா விசுவலிங்கம் ( வயது 57), அருட்பிரகாசம் லூசியா புஸ்பமலர் (வயது 74) ஆகியோரே உயிரிந்த நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.