மக்கள் பட்டினியில் ……அரசு உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும்! சஜித் அரசுக்கு சவால்!
நாட்டை மேலும் திவாலாக்காது உடனடியாக அரசை கலைத்து விட்டு , தேர்தல் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் தற்போது பசியால் வாடுவதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் தேவைகளை அடையாளம் காணத் தவறிவிட்டார்கள் எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், உடனடியாக தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.