வீடு வீடாக சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்வதில் மக்கள் ஆரம்பத்தில் காட்டப்பட்ட ஆர்வத்தை விட தற்போது மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவினால் பாதுகாப்பு பெற வேண்டுமாயின் தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்வது மிகவும் கட்டாயமானதும் அத்தியவசியமானதும் என்ற வகையில் மக்கள் உணர்ந்து மிக நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதை நாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் முஸ்லிம் , சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
குருநாகல் தெலியாகொன்ன ஜம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக காரணமாக குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் வருமானம் இழந்த சிங்கள முஸ்லிம்கள் தமிழ் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு தெலியகொன்ன ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் பிஸ்ருல் முனவ்பர் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
இதில் 2500 பெறுமதியான உலருணவுப் பொதிகள் 1500 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளுக்கு அமைய முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி ஒவ்வொரு வீடு வீடாக எடுத்துச் சென்று உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
(இக்பால் அலி)