கர்ப்பணிப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுத்த அரசு மருத்துவமனைகள்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கழுவதுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மீரா. அவர், 8 மாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, சிகிச்சைக்காக அவரது மாவட்டத்திலுள்ள இரண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர். அதனையடுத்து, அவருக்கு கூடுதலாக உடல் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, ஸ்ரீஅவிட்டம் திருநள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கும் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனையடுத்து இறுதியாக கொல்லம் அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தபோது குழந்தை உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது. குழந்தை ஆறு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளது. இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து, கேரளா மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதுதொடர்பாக கொல்லம் மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், ‘எந்த அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.