2/3 ம் இல்லை, பெரும்பான்மையும் இல்லை. மொட்டு, ரணிலுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயல்கிறது – சொய்சா

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற பின்னர் அரசியலமைப்பை மாற்றுவது குறித்து பேசிய மொட்டு, இப்போது அதைப் பற்றி பேசுவதை குறைத்துள்ளார்கள் என்று கம்பாஹா மாவட்ட வேட்பாளர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வெல்வது என்பது மகிந்தவின் பொதுஜன பெரமுணவுக்கு முடியாது என்று தெரிந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயமுனி சொய்சா மேலும் கூறுகையில், எப்படியாவது ஒரு எளிய பெரும்பான்மையைப் பெறுவது அல்லது ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதே அவர்களின் சமீபத்திய நோக்கமாக இருக்கிறது.

இதன் காரணமாக பொதுத் தேர்தலின் விளையாட்டு முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் மொட்டின் தேசிய அரசாங்கத்தின் கனவு சிதைந்துவிடும் என்றும் அவரது தொகுதி மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.