பிரதமர் ஆனதும், என் கையாலேயே மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன் : சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரதமர் ஆனதும், தன் கையாலேயே மக்களுக்கு சொந்தமாக நிவாரணம் வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வியலுவ தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நிவாரணம் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் மீன் டின் மற்றும் பருப்பு விலையை 15 நாட்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது என்றும் அரிசி மாஃபியாவுக்கு அடிபணிய வேண்டி வந்தது என்றும் திரு. பிரேமதாச தெரிவித்தார்.

இதற்கிடையில், 4% சலுகை வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், அத்தகைய கடன்களைப் பெற்றவர்கள் இதுவரை யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதன்படி, வெளிப்படையாக தெரியும் உண்மையின் முன் பொய்யை தோற்கடிக்கத் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Comments are closed.