அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பு.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து பேசினர்.
இதுவரை தொலைபேசி வாயிலாகவும், காணொலி வாயிலாகவும் இருவரும் உரையாடியுள்ள நிலையில், முதல் முறையாக நேரில் சந்தித்து உரையாடினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம், கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகள், ஆப்கானிஸ்தான் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.