சூப்பர் சிங்கரின் 8ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா.
சின்னத்திரையில் பெரிதளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
தொடர்ந்து பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் தற்போது 8 வது சீசன் நடந்து வருகிறது.
இதில் தற்போது அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இன்று மிகவும் பிரமாண்டமாக துவங்கிய சூப்பர் சிங்கர் 8ல் இரண்டு சுற்றுகள் நடைபெற்றது.
இந்த இரண்டு சுற்றிலும் சிறப்பாக பாடியும், மக்களிடம் இருந்து 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் பெற்றும் சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஸ்ரீதர் சேனா.
அதுமட்மின்றில் சூப்பர் சிங்கரின் 8ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவிற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பரத் 2ஆம் இடத்தையும், அபிலாஷ் 3ஆம் இடத்தையும் வென்றுள்ளனர்.