ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படாது.
நாளைய தினம் (ஒக்டோபர் 01) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்கள் வரை எந்தவொரு ரயில் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று (29) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதனடிப்படையில், ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.