போலீஸ் ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் பலி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாருக்கு மருத்துவ உதவிக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. போலீசாருக்கு மருத்துவ ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. போலீசாரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மருத்துவ காரணங்களுக்காக கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர் ஆல்ம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அபுதாபியில் நேற்று ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தபோது தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை இயக்கிய 2 விமானிகள், மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு டாக்டர் மற்றும் ஒரு நர்ஸ் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் குறித்து அபுதாபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.