மக்கள் மன்றில் ஆத்திரமடைந்த தவராசாவினால் வீரசிங்கம் மண்டபத்தில் பரபரப்பு
மக்கள் மன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கோபமுற்று தனது கையில் இருந்த கோவையை தூக்கி எறிந்ததால் மண்றில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்சியில் சி.தவராசா தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் என்ன செய்து கொண்டிருந்தது போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தார். இதன் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிவகரன் குறிக்கிட்டு கூட்டமைப்பினர் எதுவும் செய்யவில்லை விடுவோம், 20 வருடங்களாக பலமான அமைச்சரவையில் இருந்த நீங்கள் எவற்றை செய்தீர்கள் “ என கேள்வியெழுப்பினார்.
இதன் போது ஆத்திரமடைந்த தவராசா தான் கருத்து கூறும் போது குறுக்கிட வேண்டாம் எனவும், பக்கச்சார்பாக இருக்க வேண்டாம் என கூறியதை அடுத்து இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து தவராசா தன் கையிலிருந்த கோவையை தூக்கியெறிந்தார்.
அதனால் மன்றில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. அதன் போது ஏனைய பேச்சாளர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி அமைதியடையச் செய்தனர். பின்னர் மீன்டும் பழையபடி தவராசா தனது உரையை தொடர்ந்தார்.
Comments are closed.