யாழில் வாள்களுடன் ஒருவர் சிக்கினார்!
யாழ்., வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் வீடொன்றிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் வாள்கள் உள்ளன எனக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது மூன்று வாள்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து மூன்று வாள்களையும் கையிருப்பில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மூளாய் தெற்கு, சுழிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்தனர்.
குறித்த சந்தேகநபர் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.