ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடவேமாட்டாது! – போலிச் செய்திகளை நம்பாதீர்கள்.
“இன்று அரசுக்குள் இருப்பவர்கள் அரசை விமர்சிக்கும் செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக சில ஊடகங்கள் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபட்டு விடும் என்று போலிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனை எவரும் நம்பக்கூடாது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
ராஜபக்ஷ அரசு நாட்டை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்பனை செய்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
“இன்று ராஜபக்ஷ அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்த வருகின்றது.
ஆட்சியாளர்களின் தோல்வியால் இன்னும் சில மாதங்களில் விவசாயிகள் ஏழையாகி, நாட்டில் பஞ்சம் ஏற்படும்.
அரசில் இருந்து பணம் சம்பாதிக்கும் சில ஊடக நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஊடகவியலாளர்கள் ஊடக முதலாலிகள் விரும்பும் வகையில் செயற்படக்கூடாது” – என்றார்.