பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான காலம் வந்துவிட்டது – இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிப்பு
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான காலம் வந்துவிட்டதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன (Padma Gunaratne)இதனைத் தெரிவித்தார்.
சரியான மேற்பார்வையின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படவேண்டும். நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் நூற்றுக்கு 80-90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறான நிலை இந்த நாட்டில் இதற்கு முன்னர் காணப் பட்டவில்லை.
சாதாரண நிலைக்குத் திரும்புவது குறித்து தற்போது தீர்மானிக் கலாம் ஆனால் சரியான சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீளவும் திறக்க ஆளுநர்கள் நடத்திய கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.