நீதி அமைச்சினால் திருத்தப்படாத 60 சட்டங்களை திருத்தத் தயாராகும் அலி சப்ரி.

கடந்த 20 ஆண்டுகளில் நீதி அமைச்சினால் திருத்தப்படாத மற்றும் நவீனமயமாக்கப்படாத 60 சட்டங்களை திருத்தவுள்ளதாக, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதுபோன்ற மாற்றங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, எதிர்காலத்தில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள முற்போக்கான சட்ட அமைப்பிற்கு இடமளிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கைதிகள் மறுவாழ்வு அமைச்சில் (13) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, அமைச்சர் அலி சப்ரி இத்தகவலை வெளியிட்டார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, மக்களும் அதிகாரிகளும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை நீதி அமைச்சர் இங்கு மீண்டும் வலியுறுத்தினார்.

அதிகாரிகளின் அடிப்படையில், அனைத்து அதிகாரிகளும் தங்கள் இதயங்களுக்கு உண்மையாக இருக்கும்போது, நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். அத்துடன், அவர்கள் தமது கடமைகளையும் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.