(CICA) 6 ஆவது அமைச்சர்களின் கூட்டத்தில் இலங்கை பங்கேற்பு…..

ஆசியாவில் இடைவினையாற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புதலுக்கான நடவடிக்கைகளின் மாநாட்டின் (CICA) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்கான 6 ஆவது மெய்நிகர் கூட்டத்தில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேரா.ஜயநாத் கொலம்பகே தனது அறிக்கையை வழங்கும்போது, 27 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிராந்திய அமைப்பின் பொதுவான நன்மைக்கான குறிக்கோள்களை அடைவதற்காக இலங்கை தொடர்ந்து ஈடுபாட்டையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் வழங்குமென மீள வலியுறுத்தினார். CICA இன் 6 ஆவது அமைச்சர்களுக்கான கூட்டம், கஸக்ஸ்தானின் நூர்-சுல்தானில் 12 அக்டோபர் அன்று இருவேறுபட்ட முறையில் இடம்பெற்றது.

நோய்ப்பரவலினால் எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் தேவை குறித்து விபரித்த பேராசிரியர் கொலம்பகே, CICA பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை புத்துயிரளிப்பதில் பிரதான பங்கை வகிக்கவேண்டிய இலங்கையின் கடப்பாட்டினை வலியுறுத்தினார். மேலும் அவர், தேசிய தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி தொடர்பான தகவலைப் பகிர்ந்து, நோய்ப்பரவலைத் தடுப்பதற்குப் பல்வேறு வகைகளில் இலங்கைக்கு ஆதரவளித்த சர்வதேச பங்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு பல்தேசிய கருத்துக்களமான ஆசியாவில் இடைவினையாற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புதலுக்கான நடவடிக்கைகளின் மாநாடு – CICA, ஆசியாவில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கான ஒத்துழைப்பினை விரிவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. 2018 இல் இதன் முழு உறுப்புரிமையைப் பெற்ற இலங்கை, தற்போது சுற்றுலாத்துறையில் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான உப ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றுகிறது.

வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேரா.ஜயநாத் கொலம்பகேயின் முழு அறிக்கை கீழே:

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

13 அக்டோபர் 2021

………………………………………….

ஆசியாவில் இடைவினையாற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புதலுக்கான நடவடிக்கைகளின் மாநாட்டின் (CICA) 6 ஆவது அமைச்சர்களின் கூட்டத்தில் இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேரா) ஜயநாத் கொலம்பகே வழங்கிய அறிக்கை

12 அக்டோபர் (செவ்வாய்க்கிழமை) 2021 காலை 09.35 மணியிலிருந்து……

தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய வெளிநாட்டமைச்சர்களே, பிரமுகர்களே, சக அதிகாரிகளே, கனவாட்டிகளே, கனவான்களே,

CICA தனது 29 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வேளையில், இலங்கையிலிருந்து இன்றைய அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். துரதிர்ஷ்டவசமாக, இலங்கையின் வெளிநாட்டமைச்சர், பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அவர்கள், அவசரமான இன்னொரு செயற்பாட்டில் இருப்பதால் அவர் இங்கு சமுகமளிக்கமுடியாத நிலையிலுள்ளார். இந்த ஆகஸ்ட் மாத ஒன்றுகூடலில் பெருந்தகையோருக்கும் மரியாதைக்குரிய பங்கேற்பாளர்களுக்கும் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களிடமிருந்தான பாராட்டுக்களை நான் தெரியப்படுத்துகிறேன்.

இன்றைய கூட்டத்தைக் கூட்டுவதற்கு உரிய நேரத்தில் முயற்சியெடுத்தமைக்காக CICA இற்குத் தலைமைத்துவம் வகிக்கும் கஸக்ஸ்தான் குடியரசை நான் பாராட்டுவதுடன், உங்கள் திறமையான வழிகாட்டுதலின் கீழ், இக்கூட்டத்தின் பெறுபேறு வெற்றிபெறும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் உள்ளோம்.

CICA இன் செயற்பாட்டிற்கு மேலும் உத்வேகத்தையும் இயக்க சக்தியையும் வழங்கும் CICA செயலகத்தின் செயற்றிறன் மிக்கதும் தூரநோக்குள்ளதுமான பங்கினை இலங்கை பாராட்டுகிறது.

மேன்மைதங்கியோரே,

இன்றைய எமது கூட்டமானது, பயங்கரமான நோய்ப்பரவலால் தூண்டப்பட்ட, எதிர்பாராத ஒரு சூழ்நிலைக்கு மத்தியில் இடம்பெறுகிறது. எமது மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் நாம் இன்னமும் கடுமையான இடையூறுகளைச் சந்தித்து வருகிறோம். இப்பின்னணியில், கூட்டாக சவால்களை இனங்காணவும் ஒப்பேறக்கூடிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கவும் எமது பிராந்தியத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதும் நேர்மையானதுமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சரியான திட்டங்களைப் பின்பற்றவும் இக்கூட்டம் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 பதில்வினைகள் தொடர்பில், இலங்கை அரசாங்கமும் தற்சமயம் தடுப்பூசி செலுத்துவதிலான அதன் முயற்சிற்கு முன்னுரிமையளித்துள்ளதுடன், அண்மையில் அதிகரித்துவரும் தொற்றுக்களுக்கு மத்தியில், மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் அதேவேளை, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.

இன்றுவரை, 11.9 மில்லியன் இலங்கையர்கள், அதாவது, நாட்டின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 54 வீதமான, 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு விதமாக எமக்கு ஆதரவை வழங்கிய நட்பு ரீதியான சர்வதேச மற்றும் பல்தரப்பு பங்காளர்களுக்கு நாம் உண்மையாகவே நன்றி தெரிவிக்கிறோம்.

பரஸ்பர நன்மைபயக்கும் விடயங்கள் குறித்து முழுமையான பேச்சுவார்த்தைக்கு அவசியமான பொறிமுறையாக CICA உள்ளதாக இலங்கை கருதுகிறது. பொதுவான நன்மைகளுக்காக CICA உறுப்பு நாடுகளிடையே பங்குடைமை மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயலகம் மற்றும் உறுப்பு நாடுகளின் சமீபத்தைய முயற்சிகளை நாம் வரவேற்கிறோம்.

பிராந்திய மற்றும் உலகளாவிய இணைப்புகை மூலமாக நிலையான அபிவிருத்தியை அடையும் இலங்கையின் தொலைநோக்கானது, அதன் சமநிலையானதும் பக்கச்சார்பற்றதுமான வெளிநாட்டுக் கொள்கையால் வளர்கிறது என்பது, ‘செழிப்பு மற்றும் மேன்மையின் காட்சி’ தேசிய அபிவிருத்தி கொள்கைக் கட்டமைப்பில் மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சொல்லப்பட்டது.

உலகளாவிய பொருளாதாரத்தின் ஈர்ப்பு மையமானது படிப்படியாக ஆசியாவை நோக்கி நகர்ந்துள்ளது என்பது தெரிந்ததே. கடந்த சில தசாப்தங்களாக, ஆசிய பொருளாதாரங்கள் உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களை விடவும் பெரிதாகி வருகிறது.

எனவே, அதிகரித்துவரும் உலகமயமாக்கல் மற்றும் நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில், CICA பிராந்தியத்தில் கடல்சார்ந்த, நிலம், மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் பிற விதமான இணைப்புகை வெற்றிக்கு இன்றியமையாததாகிறது என்பது தெளிவாகிறது. இச்சூழலில், பேராவலுடைய நிலையான அபிவிருத்தி குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு CICA இன் கூட்டுத் தலைமைத்துவத்தினை இலங்கை எதிர்பார்க்கிறது.

எனவே, பெருகிய முறையில் உலகமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில், கடல், நிலம், மக்களிடம் இருந்து மக்கள், மற்றும் CICA பிராந்தியத்தில் பிற வகையான இணைப்புகள் வெற்றிக்கு இன்றியமையாததாகிறது என்பது தெளிவாகிறது. இந்த சூழலில், இலட்சிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை கூட்டாக நிறைவேற்ற CICA வின் கூட்டுத் தலைமையை இலங்கை எதிர்பார்க்கிறது.

பெருந்தகையோரே,

சுற்றுலாத்துறையில் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான துணை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் எமது ஆற்றலுக்குக்கேற்ப, சுற்றுலாத் துறை நோய்ப்பரவலினால் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள, இலங்கை முக்கியமான பங்கினை வகிக்கும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். உலகின் சிறந்த சுற்றுலாப்பயண சேரிடங்களில் ஒன்றான இலங்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘சுற்றுலா கூட்டுறவினை மேம்படுத்துவதற்காக, CICA உறுப்பு நாடுகளுடனான மெய்நிகர் வணிக இடைவினையாற்றல் அமர்வு’ ஒன்றை வெற்றிகரமாக நடாத்தியது.

இப்பிராந்தியத்தில் சுற்றுலாத் தொழிற்றுறையில் கூடிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பினை நோக்கமாகக்கொண்டு, CICA செயற்றிட்டத்திற்காக பல்வேறு பிற செயற்பாடுகளை நாம் முன்மொழிந்துள்ளதுடன், இனிவரும் வருடங்களில் இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் உங்கள் முழுமையான ஒத்துழைப்பினைப் பெறுவதை நாம் எதிர்பார்க்கிறோம்.

கனவாட்டிகளே கனவான்களே

இன்றைய கூட்டமானது, கடந்தகாலங்களில் CICA குடும்பத்தினிடையிலான இடைவினையாற்றல்களில் நாம் பெற்ற அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்வது மட்டுமன்றி, எமது கூட்டு முயற்சிகளைச் சிறப்பாக கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும் என நான் நிச்சயமான நம்புகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.