அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம் ஈபிடீபிக்கு ஆதரவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,
“எமது சங்கமானது 30 வருடகால அனுபவத்தை கொண்டு வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட பாரிய தொழிற்சங்கமாகும்.
எமது தொழிற்சங்கமானது பாரிய திட்டங்களைக் கொண்டு தொழிற்சங்க ஊழியர்களின் ஊடாக மக்களுக்கும் சேவையாற்றி வந்திருக்கிறது. மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். அந்தவகையில் சுமார் முப்பது வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்தோம்.
எனினும், இம்முறை தேர்தலில் மாற்றத்திற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதாக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக கல்முனையில் இடம்பெற்ற தலைமைப்பீட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.” – என்றார்.
Comments are closed.