சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டம்.

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் போராட்டம் தொடரும் – ஜோசப் ஸ்டாலின்
பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும் தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் எமது வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக் கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப் படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரி வித்துள்ளது.