தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்து! – இராணுவத் தளபதி எச்சரிக்கை.
“இலங்கை மக்கள் சுகாதார பழக்கங்களைப் பின்பற்றாமல் செயற்பாட்டால் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளன.”
– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கொரோனாத் தொற்று மீண்டும் பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதனை அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சுகாதார சட்டங்களைப் பின்பற்றிச் செயற்படுமாறும் நாட்டு மக்கள் அனைவரிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதுவரையில் நாட்டில் கொரோனத் தொற்று ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.