215ஆவது ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 215ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
புத்தபெருமானுக்கு மலர் பூஜை நிகழ்த்தியதை தொடர்ந்து தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய இத்ததெமலியே சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ சந்திரஜோதி இந்தசர தேரர் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்க்ஷ அவர்கள் வரவேற்றார்.
பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் சகல பௌர்ணமி தினங்களிலும் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வு நடத்தவதன் ஊடாக ஒரு அரச தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டிற்காக உன்னத சேவையாற்றி வருவதாக இத்ததெமலியே சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ சந்திரஜோதி இந்தசர தேரர் குறிப்பிட்டார்.
இத்தால் 24 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு கலதாரி ஹோட்டலுக்கு அருகில் எல்.ரீ.ரீ.ஈ.-இனால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் காயமடைந்த அமரத்துவமடைந்த கோட்டை சம்புத்தாலோக தேரரின் நலன் விசாரிக்க அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகைத் தந்திருந்தமையை வணக்கத்திற்குரிய தேரர் இதன்போது நினைவூட்டினார்.
அக்காலத்தில் கோட்டை விகாரை என்ற அடிப்படையில் நமக்கு பல்வேறு பேரழிவு சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிட்டது. டெலிகொம் நிறுவனம் அருகே குண்டு வெடித்தது. புறக்கோட்டை போதி மரம் அருகே குண்டு வெடித்தது. எமது விகாரைக்கு அருகே குண்டு வெடித்தது. இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாமும் பாதிக்கப்பட்டோம். எமது விகாரையும் பாதிக்கப்பட்டது. இன்று அவ்வாறான குண்டு அச்சம் நிலவும் சூழல் இல்லை.
நீங்கள் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதியாக அன்று நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தால் நாம் இத்தனை பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்க மாட்டோம் என நம்புகிறேன். அன்று நீங்கள் இருந்திருந்தால் எமது தலைமை தேரர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.
தர்ம உபதேசத்தின் நிறைவில் பிரதமரினால் வணக்கத்திற்குரிய தேரருக்கு சிறப்பு நினைவு பரிசொன்று வழங்கிவைக்கப்பட்டது.
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இடம்பெற்ற ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட சிலர் கலந்து கொண்டனர்.