முன்னாள் இராணுவச் சிப்பாய் இரு கைக்குண்டுகளுடன் கைது.

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவுப் பகுதியில் இரண்டு கைக்குண்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவச் சிப்பாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த இராணுவச் சிப்பாயைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.