ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர்.
கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல, ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக நேற்றைய தினத்தில் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 5 ஆயிரத்து 834 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 3 ஆயிரத்து 969 பேருக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 59 ஆயிரத்து 428 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 75 ஆயிரத்து 763 பேருக்கும் ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 786 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 6 ஆயிரத்து 180 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.