மூன்று விபத்துக்களில் மூவர் பரிதாப மரணம்!

மூன்று விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மாத்தளை, லக்கல மொரகஹகந்த வீதி, யகாகடுல்ல வாவிக்கு அருகில், கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், படுகாயமடைந்த கப்ரக வாகனத்தின் சாரதி மற்றும் கப்ரக வாகனத்தில் பயணித்த மூவர் உள்ளடங்களாக நால்வர் தாஸ்கிரிய வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது சாரதி உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே மரணமடைந்துள்ளார்.
அநுராதபுரம், தவரக்குளம் வீதி, 06 ஆம் மைல்கல் பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று மின்சாரத் தூண் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குருந்தன்குளம் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அநுராதபுரம் ஹபரண – தம்புள்ளை வீதி, 112 மைல்கல் பகுதிகயில், கப்ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த கப்ரக வாகனத்தின் சாரதி மற்றும் கப்ரக வாகனத்தில் பெண் உள்ளிட்ட இருவரும் ஹபரன வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தம்புள்ளை, வேல்வெஹர பிரதேசத்தை சேர்ந்த 56 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.