வடக்கில் அதிக கவனம் செலுத்தப்படும் – மகிந்த தேசப்பிரிய

வடக்கில் தற்போதும் தனி நிர்வாகம்தான் இடம்பெறுவதனால் அங்கே அதிக கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூர் ஊடகங்கள் , உள்ளூர்த் தொலைக் காட்சிகளான கேபிள் இணைப்புக்களில் 3ம் , 4ம் திகதிகளில் விளம்பரங்கள் தேர்தல் கருத்துக்கள் பரப்ப முடியுமா என ஈ.பீ.டீ.பி சார்பில் தேர்த் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட தவராசா சி.தவராசா கேள்வி எழுப்பினார். இதன்போது ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவிக்கையில் ,

எந்த வகையான ஊடகமும் எந்த விளம்பரமோ அல்லது ஊக்களிக்கஙோ முடியாது என்பதே சட்டமாகும். ஆனாலும் வடக்கு எப்பவும் தனி நிர்வாகமாகவே இருக்கின்றது. அதனால் இம்முறை இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். என்றார்.

Comments are closed.