தாய்த்தமிழ் பேரவையின் கொரோனா விழிப்புணர்வு.
தாய்த்தமிழ் பேரவையின் கொரோனா விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் சமாதான நீதவான், மற்றும் புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தின் தலைவர் த.நவநீதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசித்து வரும் தர்மலிங்கம். இன்பவரன் (இன்பன்) கனடாவில் வசித்து வரும் குணரெத்தினம்.குணசேகர் இரணைப்பாலை றோ.க.வித்தியாலயத்தின் ஆசிரியர் திருமதி பத்மராணி. சண்முகலிங்கம்,, அமரர் புஸ்பராசா நற்பணி மன்றம்,, வனிதா. ஜெயகாந்தன் அறக்கட்டளை,, சிவா அன்னதான அறக்கட்டளை,, ஆகியோரின் நிதி அனுசனரையில் கொரோனா விழிப்புணர்வு பணி 23.10.2021 அன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய்தமிழ் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா (அதிபர்) அவர்களின் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மங்களவிளக்கினை தாய்த்தமிழ் பேரவையின் ஆலோசகர் மாவட்டச்செயலகத்தின் பிரதம கணக்காளர் திரு மி.யே றெஜினோல்ட், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி தயானந்தரூபன்,, புதுக்குடியிருப்பு ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயத்தின் அதிபர் திரு ந.அமிர்தநாதன்,, பொதுசுகாதார பரிசோதர் திரு p.வானுஜன் ,, 682 ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக பொறுப்பதிகாரி , புதுக்குடியிருப்பு காவல்துறையின் பிரதி பொறுப்பதிகாரி,, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ பிரதி தவிசாளர் திரு க.ஜெனமேஜந்,, புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் சங்கத்தின் தலைவர் த.நவநீதன்,, ஆசிரியை திருமதி பத்மராணி.சண்முகலிங்கம் ,, தாய்த்தமிழ் பேரவையின் புதுக்குடியிருப்பு பிரதேச ஆலோசகர் திரு யோ.மனோதாஸ்,, சமூக செயற்பாட்டாளர் முல்லைஈசன்,, தாய்த்தமிழ் மகளிர் பேரவையின் முல்லைமாவட்டத்தின் தலைவி திருமதி ப குணசிவா,, தாய்த்தமிழ் பேரவையின் பொருளாளர் திருமதி இ.சிவலோஜினி,, தாய்த்தமிழ் பேரவையின் புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் தலைவி திருமதி கௌதமன் இராஜேஸ்வரி ஆகியோர் ஏற்றிவைக்க கொரோனா கொடிய தொற்றால் உயிர்நீத்த எமது உறவுகளுக்கான திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலையினை தாய்த்தமிழ் பேரவையின் இளைஞர் அணி செயற்பாட்டாளர் திரு நீயூட்டன் அணிவித்தார்.
அகவணக்கத்தினை தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பணியினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து விழிப்புணர்வு உரைகளை பிரதம பிரதமகணக்காளர் திரு றெஜினோல்ட்,, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு ஜெயகாந்தன்,, வணிகர்சங்கத்தின் தலைவர் த.நவநீதன்,, பொதுசுகாதார பரிசோதகர் p.வானுஜன் ஆகியோர் நிகழ்தினர் மக்களுக்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள்,, முகக்கவசங்கள்,, என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு பதாதைகள்,, சுவரொட்டிகள்,, ஒலிபெருக்கி விளம்பரங்கள் ஊடாக விழிப்புணர்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இப் பணி தொடச்சியாக ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்பபடவுள்ளது குறிப்பிடத்தக்கத்தக்கது.