நீரில் மூழ்கி இளைஞர் பரிதாப மரணம்!
நீர்கொழும்பு, கொச்சிக்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மா ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கொச்சிக்கடைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அம்பலயாய, கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரே மரணமடைந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொச்சிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.